இப்போட்டி எங்களை உளவியல் ரீதியாக வலிமை படுத்தியுள்ளது - மிதாலி ராஜ்

Updated: Mon, Jun 21 2021 10:11 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜூன் 16ஆம் தேதி பிரிஸ்டோலில் உள்ள காவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் தோல்வியின் விழிம்பிலிருந்து இந்திய அணி ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது அபர ஆட்டம் காரணமாக டிராவில் முடிவடைந்தது. 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான் டெஸ்ட் போட்டியை டிரா செய்ததன் மூலம் நாங்கள் உளவியல் ரீதியாக வலிமையடைந்துள்ளோம் என இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மிதாலி ராஜ், உளவியல் ரீதியாக,“இப்போட்டி ஒரு பெரிய ஊக்கமளிப்பதாக நான் கருதுகிறேன். அது நிச்சயமாக இங்கிலாந்தை பின்னணியில் வைக்கும். ஏனெனில் முக்கிய வீராங்கனைகள் செயல்படவில்லை என்றாலும், கடைநிலை வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, பேட்டிங் இந்திய மகளிர் அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலிமையடைந்துள்ளதை இது காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை