எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் இருப்பதுடன், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் இரண்டு வெற்றி, 4 தோல்வி என புள்ளிப்பட்டியளின் 5 இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்
- இடம் - கிங்ஸ்மீத், டர்பன்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
கிங்ஸ்மீத் மைதானம் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை இயற்கையாகவே கொண்டிருக்கும். எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதை சரியாக பயன்படுத்தும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதே சமயம் வேகத்தில் நல்ல லைன், லென்த்தில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
நேரலை
இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 03
- டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01
- பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - 02
உத்தேச லெவன்
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: டோனி டி ஸோர்ஸி, மேத்யூ பிரீட்ஸ்கி, ஜேஜே ஸ்மட்ஸ், குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், மார்கஸ் ஸ்டோய்னிஸ், வியான் முல்டர், கேசவ் மகராஜ்(கே), ரீஸ் டாப்லி, நூர் அஹ்மது, நவீன்-உல்- - ஹக்
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், கைல் வெர்ரைன், ரைலி ரூஸோவ், காலின் இங்க்ராம், ஷேன் டாட்ஸ்வெல், கார்பின் போஷ், வெய்ன் பார்னெல் (கே), ஈதன் போஷ், ஆதில் ரஷித், டேரின் டுபாவில்லன்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென்(கேப்டன்), பில் சால்ட்
- பேட்டர்ஸ்: ரைலீ ரூஸோவ், மேத்யூ பிரீட்ஸ்க்கி
- ஆல்-ரவுண்டர்கள்: ஜேஜே ஸ்மட்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், வில் ஜாக்ஸ்(துணைக்கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள்: வெய்ன் பார்னெல், ரீஸ் டாப்லி, நூர் அகமது
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.