ENG vs SA: காயம் காரணமாக டுவான் ஒலிவியர் தொடரிலிருந்து விலகல்!

Updated: Sun, Aug 14 2022 15:44 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமமானது. டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17ஆம் தேதி தொடங்கிறது. இதையடுத்து முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் இடம் பிடித்துள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ்சுற்றுப்பயணத்திலிருந்து ராபின்சன் விளையாடவில்லை.

அதேசமயம் இந்திய டெஸ்டின் போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பென் ஃபோக்ஸ் மீண்டும் அணியின் இணைந்துள்ளார். நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை என்றாலும், ஹாரி புரூக் அணியில் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சீனியர் வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருடன் சாம் பில்லிங்ஸும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவும் இத்தொடருக்கான அணியை அறிவித்தது. டீன் எல்கர் தலைமையிலான இந்த அணியில் ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கான மாற்று வீரர் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்நிலையில் ஒலிவியரின் காயம் குறித்து அணி மருத்துவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்கு நாள் சுற்றுப்பயணப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில், டுவான் தனது வலது இடுப்பு பகுதியில் காயமடைந்தார். மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, அவர் ஒரு எம்ஆர்ஐ ஸ்கேனுக்காக பரிந்துரைக்கப்பட்டார், அதில் அவருக்கு இரண்டாம் நிலை காயம் உறுதிசெய்யப்பட்டது. 

காயத்தின் அளவு காரணமாக, அவர் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கவுடெங் மத்திய லயன்ஸ் மருத்துவக் குழுவுடன் தனது சிகிச்சையை தொடங்குவார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டீன் எல்கர் (கேப்டன்), சரேல் எர்வீ, மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், லூத்தோ சிபம்லா, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரேய்ன், கயா சோண்டோ மற்றும் க்ளென்டன் ஸ்டூர்மேன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை