ஆஷஸ் தொடர் நடப்பது சந்தேகம் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

Updated: Mon, Oct 04 2021 18:23 IST
Image Source: Google

கிரிக்கெட் உலகில் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள தொடர்களில் முதன்மையானது ஆஷஸ் தொடர். ஐசிசி நடத்துகின்ற தொடர்களுக்கு அடுத்ததாக ஆஷஸ் தொடர் இந்த வரிசையில் இருக்கும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்று விளையாடும். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தான். 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தொடர் என்பதால் இதற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. அதன்படி 2021-22 க்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் 8 முதல் ஜனவரி 18 நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.    

இந்நிலையில், இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தற்போது திட்டமிட்டபடி இத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி வீரர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து ஈசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் எங்கள் வீரர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். சமீபத்திய தகவல்களைப் பகிரவும் கருத்துக்களைப் பெறவும் இந்த வாரம் எங்கள் வீரர்களுடன் தொடர்ந்து பேசுவோம். இந்த வாரத்தின் பிற்பகுதியில் ஈசிபி வாரியம் கூடி, சுற்றுப்பயணம் முன்னோக்கிச் செல்ல இந்த நிலைமைகள் போதுமானதா இல்லையா என்பதை முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை