ENG vs IND, 3rd T20I: மாலன், லிவிங்ஸ்டோன் அதிரடி; இந்தியாவுக்கு 216 டார்கெட்!

Updated: Sun, Jul 10 2022 20:47 IST
Image Source: Google

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்ஹாமில் இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் கேப்டன் பட்லர் 18 ரன்களில் ஆட்டமிழக்க, 27 ரன்களில் ஜேசன் ராயும் விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பிலிப் சால்ட்டும் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - லியாம் லிவிங்ஸ்டோன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் மாலன் அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 77 ரன்கள் எடுத்திருந்த மாலன் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே மொயீன் அலியும் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். 

ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லிவிங்ஸ்டோன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை இமாலய இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லிவிங்ஸ்டோன் 42 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை