ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!

Updated: Sun, Aug 22 2021 18:34 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இத்தோடரின் முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவாது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது. இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் இடம்பிடித்துள்ளதால், அந்த அணியின் பேட்டிங் வரிசை பலமடைந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அதேசமயம் இந்திய அணி தரப்பில் இப்போட்டியில் அஸ்வின் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::