இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஓருநாள் போட்டி லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், டேவிட் மாலன் ஒரு ரன்னிலும் நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் - மொயீன் அலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 59 ரன்கள் எடுத்திருந்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்க, மொயீன் அலியும் 36 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் தனது பங்கிற்கு 38 ரன்களைச் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹொஸ்னைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியனார்.