இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன்!

Updated: Thu, May 30 2024 14:22 IST
Image Source: Google

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் நடைபெற இருந்த மூன்றாவது டி20 போட்டியும் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (மே 30) லண்டனில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.

இங்கிலாந்து அணி

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது ஏற்கெனவே ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், வில் ஜேக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், மொயீன் அலி வரிசைக்கட்டி நிற்கின்றனர். இதில் ஜோஸ் பட்லர் இப்போட்டியை தவறவிடுவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் பந்துவீச்சில் கம்பேக் கொடுத்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவருடன் ரீஸ் டாப்லி, கிறிஸ் ஜோர்டன், ஆகியோருடன் ஆதில் ரஷித்தும் இருப்பது அணிக்கு வலு சேர்க்கிறது. 

இங்கிலாந்து: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி(கே), கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி, மார்க் வுட்

பாகிஸ்தான் அணி

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் விளையாடவுள்ளது. அணியின் பேட்டிங்கில் பாபர் ஆசாம், ஃபகர் ஸ்மான் ஆகியோர் அதிரடி காட்டிய நிலையில் ரிஸ்வான், சைம் அயூப், அசாம் கான், இஃப்திகார் அஹ்மத் ஆகியோர் சோபிக்க தவறியதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஷாஹின் அஃப்ரிடி, முகமது அமீர் அபாரமாக பந்துவீசிவரும் நிலையில், ஹாரிஸ் ராவுஃப், இமாத் வசீம், ஷதாப் கான் ஆகியோர் ரன்களை வாரி வழங்கியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்: சைம் அயூப், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், அசம் கான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், முகமது அமீர், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை