இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி வழக்கம் போல் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
அதிலும் முன்னிலை வீரர்கள் குசால் பெரேரா, பாதும் நிசங்கா, தனஞ்செய டி சில்வா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய தசுன் ஷானகா நிதனமாக விளையாடி அணியை 100 ரன்களைக் கடக்க உதவினார்.
இருப்பினும் மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் 41.1 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் சுருண்டது.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷானகா 48 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் கரண் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.