ஆஷஸ் டெஸ்ட்: பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் சரிந்தது இங்கிலாந்து!

Updated: Wed, Dec 08 2021 12:09 IST
England All Out For 147 In First Ashes Test (Image Source: Google)

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். 5 போட்டி கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சினால் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டார்க் விக்கெட்டை கைப்பற்றி சாதித்தார். ரோரி பர்ன்ஸ் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 

அதைத்தொடர்ந்து டேவிட் மலான் 6 ரன்னிலும், கேப்டன் ஜோரூட் ரன் எதுவும் எடுக்காமலும் ஹசில் வுட் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். 11 ரன்னில் இங்கிலாந்து 3 விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் கேப்டன் கம்மின்ஸ் தனது அபாரமான பந்து வீச்சினால் பென் ஸ்டோக்ஸ் (5 ரன்), ஹசீப் ஹமீது (25ரன்) ஆகியோரை வெளியேற்றினார். 

பின் 6ஆவது விக்கெட்டான ஒல்லி போப்-ஜோஸ் பட்லர் ஜோடி சிறிது தாக்குப்பிடித்து ஆடியது. பின் ஒல்லி போப் 35 ரன்னிலும், பட்லர் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதனால் இங்கிலாந்து அணி 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க், ஹசில் வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை