NED vs ENG, 1st ODI: ருத்ர தாண்டவமாடிய இங்கிலாந்து பேட்டர்கள்; புதிய உலகசாதனை நிகழ்வு!

Updated: Fri, Jun 17 2022 18:44 IST
Image Source: Google

இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 ரன்னில் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த பில் சால்ட் -  டேவிட் மலான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் கடந்து,  2ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்தார்கள். இதில் பில் சால்ட் தனது முதல் சர்வதேச போட்டியில் சதம் விளாசி அசத்தினார். 

அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மாலனுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

தொடர்ந்து பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசிய இங்கிலாந்து அணி ராக்கெட் வேகத்தில் 400 ரன்களை எட்டியது. அதன்பின் 125 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மாலன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மோர்கன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து பட்லருடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோனும் தனது பங்கிற்கு ஒரே ஓவரில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசி 32 ரன்களைச் சேர்த்து பிரம்மிப்பில் ஆழ்த்தினார். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் அடித்த அதிவேக அரைசதமாகவும் இது அமைந்தது. 

இதன்மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றி அதிக ரன்களை குவித்த அணி எனும் தனது சாசதனையை முறியடித்து புதிய உலக சாதனையைப் படைத்தது. இதன்மூலம் அந்த அணி 50  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 498 ரன்களைச் சேர்த்ததுள்ளது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 162 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 66 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை