சாம்பியன்ஸ் கோப்பை 2024: ஆஃப்கான் போட்டியைத் தவிர்க்கிறதா இங்கிலாந்து?

Updated: Tue, Jan 07 2025 10:17 IST
Image Source: Google

வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை ஹைபிரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணியானது பிப்ரவரி 26ஆம் தேசி லாகூரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இநிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கொப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து அணி தவிர்க்கும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, 160 க்கும் மேற்பட்ட இங்கிலந்து அரசியல்வாதிகள் குழு, பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாடாக, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை புறக்கணிக்க இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏனெனில் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின் பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக விளையாட்டில் பெண்கள் பங்கேற்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது, இது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் விதிகளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேரடியாக மீறிவருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசியல்வாதிகள் குழுவானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பேசிய இசிபி தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் கோல்ட், “தலிபான் ஆட்சியின் கீழ் ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் அடக்குமுறையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று ஐசிசி அரசியலமைப்பு ஆணையிடுகிறது.

Also Read: Funding To Save Test Cricket

இந்த உறுதிப்பாட்டிற்கு இணங்க, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான எந்த இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளையும் நடத்துவதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் இசிபி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இதனால் ஆஃப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து தவிர்கிறதா என்ற கேள்வியானது எழத்தொடங்கியுள்ளது. முன்னதாக இதே காரணத்தை முனைவைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை