இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Jul 16 2022 12:46 IST
England vs India, 3rd ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது. 

இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 17ஆம் தேதி) நடக்கிறது. அந்த கடைசி போட்டியில் வெல்லும் அணி தான் கோப்பையை வெல்லும். எனவே போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
  • நேரம் - மாலை 3.30 மணி
  • இடம் - எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்.

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் படுமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அதிலும் முன்னணி வீரர்கள் சொதப்பியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதிலும் விராட் கோலி தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதால் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது. அதேசமயம் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியின் வெற்றியை உறுதிசெய்ய முடியும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஷமி, பும்ரா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அவர்களுடன் இணைந்து யுஸ்வேந்திர சஹாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு மேலும் பலமாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பட்லர் என அனைவரும் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர். 

பந்துவீச்சில் ரீஸ் டாப்ளி கடந்த போட்டியில் அபாரமாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அதே ஃபார்முடன் அவர் இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 105
  • இங்கிலாந்து - 44 
  • இந்தியா - 56
  • டிரா - 2
  • முடிவில்லை - 3

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி
    
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர்
  •      பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், சூர்யகுமார் யாதவ்
  •      ஆல்ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, மொயீன் அலி
  •      பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரிட் பும்ரா, ரீஸ் டாப்லி, யுஸ்வேந்திர சாஹல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை