நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Tue, Jun 08 2021 22:04 IST
CRICKETNMORE

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

இதில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றியாளர் இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் : நியூசிலாந்து vs இங்கிலாந்து
  •     இடம்: எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம், பர்மிங்ஹாம்.
  •     நேரம் : மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உத்வேகத்துடன் உள்ளது. அதேசமயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய டேவன் கான்வே அதிரடியாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார். மேலும் 125 கால இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்து அசத்தினார். 

இருப்பினும் அனுபவ வீரர்கள் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. 

பந்துவீச்சை பொறுத்தமட்டில் நெய்ல் வாக்னர், கைல் ஜெமிசன் ஆகியோருடன் அனுபவ வீரர் டிம் சௌதியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது. 

இங்கிலாந்து அணி

இத்தொடரில் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் டோமினிக் சிப்லி சதமடித்து அணிக்கு உதவியதைத் தவிர மற்ற வீரர்கள் சரிவர செயல்படாதது அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. 

பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த அணியும் பந்து வீச்சை நம்பிய இத்தொடரை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒருவேளை இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவும் பட்சத்தில் தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 106 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 11 டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 48 போட்டிகளையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 46 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உத்தேச அணி விவரம்

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராலி, ஜோ ரூட் (கே), டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப், ஜேம்ஸ் பிரேசி , கிரேக் ஓவர்டன் / ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

நியூசிலாந்து: டாம் லாதம், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பிஜே வாட்லிங், கொலின் டி கிராண்ட்ஹோம் / மிட்செல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமீசன், டிம் சௌதி, நெய்ல் வாக்னர்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - பிஜே வாட்லிங்
  • பேட்ஸ்மேன்கள் - டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், ஒல்லி போப், ஜோ ரூட்
  • ஆல்ரவுண்டர்கள் - கொலின் டி கிராண்ட்ஹோம்
  • பந்து வீச்சாளர்கள் - ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை