ENG vs PAK, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 13) பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: இங்கிலாந்து vs பாகிஸ்தான்
- இடம் : எட்ஜ்பஸ்டன், பர்மிங்ஹாம்
- நேரம் : மாலை 5.30 மணி
போட்டி முன்னோட்டம்
இங்கிலாந்து
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான பரிச்சையமில்லாத இங்கிலாந்து அணிஅனுபவ வீரர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக டேவிட் மாலன், ஸாக் கிரௌலி, ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர்.
அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சாகிப் மஹ்மூத், கிரேக் ஓவர்டன், மேத்யூ பர்கின்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை வழங்குபதா, நாளைய போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்து ஒருநாள் தொடரில் தோல்வியடைந்துள்ளது.
அதிலும் கேப்டன் பாபர் அசாம், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான் ஆகியோர் ரன்களை சேர்க்க தவறியதே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் நாளைய போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சிலும் உலக தரம் வாய்ந்த ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி ஆகியோரும் நேற்றைய போட்டியில் செல்லிக்கொள்ளும் அளவிற்கு தங்கள் பங்களிப்பை அளிக்க வில்லை. ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி நாளை போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 90
- பாகிஸ்தான் வெற்றி - 32
- இங்கிலாந்து வெற்றி - 55
- முடிவில்லை - 3
உத்தேச அணி
இங்கிலாந்து - பிலிப் சால்ட், டேவிட் மாலன், ஸாக் கிரௌலி, ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜான் சிம்ப்சன், லூயிஸ் கிரிகோரி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், மேத்யூ பார்கின்சன்
பாகிஸ்தான் - இமாம் உல் ஹக், ஃபகர் ஸமான், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், சோஹைப் மக்சூத், சதாப் கான், ஃபஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவூஃப்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான்
- பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம், சோஹைப் மக்சூத், ஃபகர் ஸமான், ஸாக் கிராலி, டேவிட் மாலன்
- ஆல்ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ், லூயிஸ் கிரிகோரி
- பந்து வீச்சாளர்கள் - ஷாஹீன் அஃப்ரிடி, சாகிப் மஹ்மூத், மேத்யூ பார்கின்சன்