இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Jul 26 2022 21:51 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 62 ரன் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து 118 ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. 3ஆவது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

அடுத்து இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடர் நடக்கிறது. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நாளை நடக்கிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன. இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - கவுண்டி மைதான, பிரிஸ்டோல்
  • நேரம் - இரவு 11 மணி

போட்டி முன்னோட்டம்

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தவறவிட்டது. அதேபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.

இதனால் டி20 தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், மொயீன் அலி என நட்சத்திர பேட்ஸ்மேன்களும், ரீஸ் டாப்லி, சாம் கரண், கிறிஸ் ஜோர்டன் ஆகியோருடன் ஆதில் ரஷித்தும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் டேவிட் மில்லர் தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணியும் சமீப காலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக், ரீசா ஹென்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்களும், காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • இங்கிலாந்து - 11
  • தென் ஆப்பிரிக்கா- 10
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் (கே), டேவிட் மலான், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், சாம் குர்ரன், ரீஸ் டாப்லி

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ரிலீ ரோசோவ், டேவிட் மில்லர் (கே), ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மகாராஜ்

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், குயின்டன் டி காக்
  •      பேட்டர்ஸ் - ராஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மாலன், டேவிட் மில்லர்
  •      ஆல்-ரவுண்டர்கள் - மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன்
  •      பந்துவீச்சாளர்கள் - தப்ரைஸ் ஷம்சி, ரீஸ் டாப்லி, ககிசோ ரபாடா, கிறிஸ் ஜோர்டான்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை