டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Nov 05 2021 22:47 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்து ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மீதம் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ஈயான் மோர்கன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் மோதவுள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஷார்ஜா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஏற்கெனா இத்தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் பேட்டிங்கிலும், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஆதில் ரஷித் பந்துவீச்சிலும் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 

அணியின் பேட்டிங்கில் மில்லர், டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஸம்ஷி ஆகியோரும் இருப்பதால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • இங்கிலாந்து வெற்றி - 8
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 9

உத்தேச அணி 

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஈயான் மோர்கன் (கே), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வூட்

தென்ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ஜேசன் ராய், டெம்பா பவுமா
  • ஆல்-ரவுண்டர்கள் - மொயின் அலி, டுவைன் பிரிட்டோரியஸ்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நோர்ட்ஜே, ககிசோ ரபாடா, அடில் ரஷித், தப்ரைஸ் ஷம்சி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை