டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Oct 22 2021 15:33 IST
Cricketnmore

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாளை (அக்டோபர் 23) நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம் 
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்துவருகிறது. அதிலும் பட்லர், மாலன், பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஜேசன் ராய் என முண்ணனி டி20 கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்டுகள் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், கிறிஸ் ஜோர்டன், சாகிப் மஹ்சூத் ஆகியோருடன் ஆதில் ரஷித்தும் இருப்பது எதிரணிக்கு தலைவலியான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் கீரேன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் அணிகளில் ஒன்று. மேலும் இருமுறை டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ள வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது முறையாக கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது. 

அதற்கேற்றது போல் லூயிஸ், சிம்மன்ஸ், கெயில், பிராவோ, ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன் என அனுபவமும் இளமையும் கலந்த அணி இத்தொடரில் விளையாடுகிறது. 

மேலும் கடந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி தான் வெஸ்ட் இண்டீஸ் கோப்பையைக் கைப்பற்றியது என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • இங்கிலாந்து வெற்றி - 7
  • விண்டீஸ் வெற்றி -11

உத்தேச அணி 
இங்கிலாந்து -
ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பெயர்ஸ்டோ, ஈயான் மோர்கன் (கே), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், டைமல் மில்ஸ்

வெஸ்ட்  இண்டீஸ்- லெண்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரேன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, ஃபாபியன் ஆலன், ஓபேட் மெக்காய், ஹேடன் வால்ஷ்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - ஜேசன் ராய், டேவிட் மாலன், ஷிம்ரான் ஹெட்மையர்
  • ஆல் ரவுண்டர்கள் - மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், கீரேன் பொல்லார்ட்
  • பந்துவீச்சாளர்கள் - மார்க் வூட், அடில் ரஷித், ஹேடன் வால்ஷ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை