நியூசிலாந்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடரை ரத்து செய்யும் இங்கிலாந்து - தகவல்!

Updated: Fri, Sep 17 2021 19:18 IST
Image Source: Google

ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நியூஸிலாந்து அரசு எச்சரிக்கை செய்ததையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ள நியூஸிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டி நகரில் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட இருந்தது. ஆனால், போட்டி தொடங்க சில மணி நேரத்துக்கு முன் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சம், நியூஸிலாந்து பாதுகாப்பு ஆலோசகர்களின் அறிவுரை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடனான தொடரைத் தொடர முடியாது. ஆதலால், தொடரை ரத்து செய்து உடனடியாக நியூஸிலாந்து வீரர்கள் நாடு திரும்புவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த இங்கிலாந்து அணி தொடரை ரத்துசெய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்திதொடர்பாளர் கூறுகையில், “பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்துசெய்ததையடுத்து, நாங்களும் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

அதனால் எங்கள் பாதுகாப்பு அதிகரிகள் பாகிஸ்தானின் நிலவரம் குறித்து ஆராயவுள்ளனர். அவர்கள் அளிக்கும் தகவலின் படி அடித்த 24- 26 நேரத்திற்குள் எங்களது முடிவை அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை