அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?  - ஜெயவர்தனே பதில்!

Updated: Thu, May 05 2022 18:55 IST
Image Source: Google

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக சொதப்பி வருகிறது. தொடர்ந்து 8 தோல்விகளை பெற்றுவிட்ட பின்னர் தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மும்பை அணி மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளை மட்டும் தான் பெற்றுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற வேண்டும். அந்தவகையில் மும்பை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டது. மும்பை அணியின் தோல்விகளுக்கு ரோகித்தின் பிடிவாதம் கூட காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த அணியில் பவுலிங் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது. டேனியல் சாம்ஸ் ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களை வாரி வழங்கும் போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகின்றனர். ஆனால் வாய்ப்புக்காக 2 ஆண்டுகளாக காத்திருக்கும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு வாய்ப்பை கூட இன்னும் தராமல் உள்ளனர். ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கரின் தேவை இருக்கும் போதும், ரோகித் அவரை புறக்கணிக்கிறார்.

இந்நிலையில் சச்சின் மகனுக்கு ஏன் வாய்ப்பே கிடைக்கவில்லை என மும்பை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே கூறியுள்ளார். அணியில் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கும். அணியின் காம்பினேஷ் மற்றும் வெற்றிகள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு காம்பினேஷனாக முயற்சி செய்து வருகிறோம்.

தற்போது தான் முதல் வெற்றியை பெற்றுள்ளோம். அதே நம்பிக்கையில் மிகவும் சிறந்த வீரர்களை களத்திற்கு கொண்டு வருகிறோம். அதில் அர்ஜுன் டெண்டுல்கரும் அதில் ஒருவராக இருந்தால் நிச்சயம் அவர் குறித்து பரிசீலிப்போம். எனினும் அனைத்து காம்பினேஷன்களை வைத்து தான் இறுதி முடிவுகளை எடுக்கிறோம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை