தனது ஆல் டைம் டி20 அணியை தேர்வு செய்த எவின் லூயிஸ்!

Updated: Fri, Oct 29 2021 17:50 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த வேளையில், வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் எவின் லூயிஸ், டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் லூயிஸ். கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமல்லாது, ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக் என உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் ஆடி 1000 சிக்ஸர்களுக்கு மேல் விளாசியுள்ளார்.

அவரது அணியின் 3ஆம் வரிசையில் விராட் கோலியையும், நான்காம் வரிசையில் ஏபிடி வில்லியர்ஸ், ஐந்தாம் வரிசையில் கீரன் பொல்லார்ட் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

மேலும் விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள எவின் லூயிஸ், அவரை தனது அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனி தான். களவியூகங்கள், வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்தல் ஆகிய கேப்டன்சி விஷயங்களில் தோனிக்கு நிகர் தோனியே என்ற வகையில், தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் லூயிஸ்.

அதனைத் தொடர்ந்து 7ஆம் வரிசையில் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுழற்பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரஷித் கானை தேர்வு செய்துள்ள அவர், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார். 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

எவின் லூயிஸ் தேர்வு செய்த ஆல்டைம் டி20 லெவன்: கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கைரன் பொல்லார்டு, தோனி(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரவீந்திர ஜடேஜா, ரஷீத் கான், ஜஸ்ப்ரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை