மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இலங்கை வீரர் கைது!
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க, விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக கொண்டாடப்பட்டவர். இவர் சமீபத்தில் மேட்ச் பிக்சிங் ஊழலில் சிக்கியுள்ளார். ஒரு ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளராக அவரது திறமைக்காகவும், 2013 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் அவரது பங்களிப்பிற்காகவும் சேனநாயக்க அறியப்பட்டார்.
சச்சித்ர சேனாநாயக்கவின் கிரிக்கெட் பயணம் குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் நின்றது எனலாம். மூன்று வடிவங்களிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், மதிப்புமிக்க பந்துவீச்சு ஆல்ரவுண்டராக தனது திறமையை நிரூபித்தார். அவர் 2014 ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் அவர் இருந்தார்.
இவர் 2012 முதல் 2016 வரையில் 49 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும், 24 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அஜந்தா மெண்டிஸ் மற்றும் சீக்குகே பிரசன்னா போன்ற புகழ்பெற்ற பந்துவீச்சாளர்களுடன் இணைந்து நின்று, அவரது சுழல் திறமை அவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தேர்வு செய்ய வைத்தது.
டி20 கிரிக்கெட்டின் ஆற்றல்மிக்க உலகில், 2013 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக சேனநாயக்கா முத்திரை பதித்தார். அவரது பேட்டிங் பங்களிப்பு குறைவாக இருந்தபோதிலும், அவரது ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சு சென்னை அணியின் வரிசைக்கு ஆழத்தை சேர்த்தது. அவர் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், இரு வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்த அவர் முயற்சி செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு தலைமை நீதிமன்றம், செனனாயகே 3 மாதம் வெளிநாடு செல்ல தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அவரை கைது செய்துள்ள நிலையில், அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் அட்டார்னி ஜெனரல் துறை உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.