ஆர்சிபி அணிக்காக விளையாடுவது பெருமையாக உள்ளது - வானிந்து ஹசரங்கா!

Updated: Sun, Aug 22 2021 18:24 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

அதன்படி இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், பின் ஆலன் ஆகியோர் இந்த சீசனில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்த ஆர்.சி.பி நிர்வாகம் 3 வீரர்களை தேர்வு செய்து உள்ளது. அதில் அண்மையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரில் தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்காவை ஜாம்பாவிற்கு பதிலாக தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில்தான் பெங்களூர் அணிக்காக தேர்வானதை மகிழ்ச்சியுடன் அறிவித்த ஹசரங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியின் உடை அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் “நான் வீட்டில் அமர்ந்து டிவியின் முன் ஆர்சிபி அணி விளையாடியதைப் பார்த்து வந்தேன், ஆனால் தற்போது அந்த அணியில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாகவும், வியப்பாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக அவருக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை