இந்திய அணியை வீழ்த்தியது பெருமையாக உள்ளது - டீன் எல்கர்!

Updated: Fri, Jan 14 2022 20:52 IST
Extremely happy how things turned out: Dean Elgar on Test series win against India (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. கடந்த 11ஆஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களை குவிக்க தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்கள் மட்டுமே குவித்தது. 

இதன் காரணமாக 13 ரன்களுடனும் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் பெருமையான ஒன்று. ஏனெனில் இந்த தொடரில் பல முறை நாங்கள் சறுக்கலை சந்தித்து இருந்தும் சிறப்பாக அதில் இருந்து மீண்டு வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பின்னர் அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி என்பது மிகவும் மகிழ்ச்சி.

எங்களது அணி வீரர்கள் முதல் போட்டியில் விளையாடிய பின்னர் நான் அவர்களிடம் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி கூறினேன். அதன்படி எங்கள் அணியில் பெரிய வீரர்கள் யாரும் இல்லை என்றாலும் நாங்கள் 11 வீரரும் ஒரு அணியாக போராடினோம். அந்த கடின உழைப்பின் காரணமாகவே இரண்டு பெரிய போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளாம்.

இந்த வெற்றி எங்களுக்கு சிறப்பான ஒன்று. இந்தியா போன்ற நம்பர் ஒன் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி வீழ்த்தியது உண்மையிலேயே ஒரு அணியின் கேப்டனாக எனக்கு பெருமையாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை