ஒலிம்பிக்கில் டி10 இடம்பெறும் - ஃபாஃப் டூ பிளெசிஸ் நம்பிக்கை!
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வந்தாலும், பிரபலங்கள் கூறும் கருத்தும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது தொடர்பான மிகப் பெரிய விஷயத்தை கூறியுள்ளார்.
அபுதாபி டி10 லீக் தொடரில் பங்கேற்கவுள்ள ஃபாஃப் டூ பிளெசிஸ், “நான் நீண்ட காலமாக, கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறேன், இருந்தாலும் டி10 கிரிக்கெட் என்னை ஈர்க்கிறது. என்னைப் போன்றே பல வீரர்கள் இதுபோன்ற போட்டிகளில் விளையாட விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.
டி10-ன் எதிர்காலம் நன்றாக இருக்கிறது. இது ஒலிம்பிக்கிலும் பயன்படுத்தக்கூடிய கிரிக்கெட்டின் சிறந்த வடிவம் என்று நம்புகிறேன். மேலும் டி10யில் போட்டியின் நேரமும் குறைவதால், அது பார்வையாளர்களை ஈர்க்கும். எனவே, டி10 கிரிக்கெட் ஒலிம்பிக் விளையாட்டிற்கு சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Also Read: T20 World Cup 2021
தற்போது டி10 கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ள ஃபாஃப் டூ பிளெசிஸ், பங்களா டைகர்ஸ் அணியை வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.