ஐபிஎல் அனுபவம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!

Updated: Thu, May 27 2021 22:35 IST
Image Source: Google

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் முன்னதாக ஏப்ரல் 26ஆம் தேதியே டெல்லி அணியின் மூத்த பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருக்கு கரோனா பாதித்ததால் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறினார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஐபிஎல் அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  “நான் இருக்கும் பகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கரோனா பாதித்தது. என்னுடைய சகோதரர்கள் கூட கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நான் ஐபிஎல் தொடரின் போது பத்து நாட்களாக தூங்கவில்லை. தூக்கமின்றி போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் நான் ஐபிஎல் தொடரில் இருந்து இருந்து விலகலாம் என முடிவெடுத்தேன்.

நான் ஐபிஎல் தொடரை விட்டு பாதியில் வெளியேறினால், என் வாழ்க்கையில் இனி விளையாட வாய்ப்புகள் இருக்குமா என்ற கேள்வியும் என்னிடம் எழுந்தது. ஆனால் அந்த இக்கட்டான சூழலுக்கு ஏற்ப நான் செயல்பட வேண்டியிருந்தது. ஆனால் எனது குடும்பத்தினர் குணமடைந்து, நான் போட்டிக்கு திரும்பலாம் என நினைத்த போது சரியாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

ரசிகர்கள் பலரும் அணிகளின் பபுள்கள் உடைந்தது என்றால் வெளியாட்கள் பபுளுக்குள் நுழைந்ததாக அர்த்தம் அல்ல. அது ஒரு வைரஸ், அது எங்கிருந்து, எப்படி பபுளுக்குள் நுழைகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே பபுள் உடைந்து விட்டது என்றால் யாரேனும் உள்ளே நுழைந்து விட்டார்கள் என்று அர்த்தம் அல்ல” என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை