கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 8, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடிய அனுபவமிக்க ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்வரும் வீரர்காள் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கேவிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியால் ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அவரால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்களை குவித்துள்ளது. இதில் டெவான் கான்வே 153, ரச்சின் ரவீந்திரா 160, ஹென்றி நிக்கோலஸ் 150 ரன்களைக் குவித்துள்ளனர். இதன் மூலம் அந்த அணி 473 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
3. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ ஃபோர்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதில் அறிமுக ஆல் ரவுண்டர் ஜொஹன் லெய்ன் வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, ஆஸ்திரேலியா தனது டாப் ஆர்டர் குறித்து தனது உத்தியை தெளிவுபடுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முதல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை வரை தானும் டிராவிஸ் ஹெட்டும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக இருப்போம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
5. தி ஹண்ட்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஃபினீக்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட பந்துகளின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை எடுத்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராக்கெட்ஸ் அணி இறுதிவரை போராடிய நிலையிலும் 137 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.