ரவி சாஸ்திரியின் கருத்தைக் கேட்டு நான் நொருங்கிவிட்டேன் -அஸ்வின் ஓபன் டாக்!

Updated: Tue, Dec 21 2021 17:20 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இடையில் 4 வருடங்கள் அவருக்கான வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா ஆகியோரின் இடங்களை குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஜோடி தான் பிடித்தது. ஆனால் அவர்களால் நீண்ட காலம் இடம்பிடிக்க முடியவில்லை. எனவே அந்த இடங்களுக்கு மீண்டும் ஜடேஜா நுழைந்துவிட்ட போதும், அஸ்வினால் வர முடியவில்லை. திறமை இருந்தும், வேண்டுமென்றே அவரை புறக்கணித்ததாக கோலி - ரவிசாஸ்திரி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில் ரவிசாஸ்திரியுடன் நடந்த மனக்கசப்பு குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார். 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. சிட்னியில் நடந்த ஒரு டெஸ்டில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அவரை பாராட்டி பேசிய ரவிசாஸ்திரி அஸ்வினை மட்டம் தட்டினார். 

அதாவது, அவர் "குல்தீப் யாதவ் தான் என்னுடைய சிறந்த அயல்நாட்டு ஸ்பின்னர், ஒவ்வொருவருக்கும் ஒரு நேரத்தில் முடிவு வரும், தற்போது குல்தீபின் காலம் தொடங்கி விட்டது" எனக் கூறினார். இதில் ஒவ்வொருவருக்கும் முடிவு வரும் என்பதில் ரவிச்சந்திரன் அஸ்வினை மறைமுகமாக கூறியிருந்தார்.

தற்போது அதனை அஸ்வின் நினைவுப்படுத்தியுள்ளார். ரவி சாஸ்திரி மீது அதிக மதிப்பு உள்ளது. அனைவருக்கும் கருத்துக்கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் அவர் தெரிவித்த அந்த நொடி, நான் முற்றிலும் நொறுங்கிவிட்டேன். சக வீரரின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்பவன் தான் நான். அந்த வகையில் குல்தீப்பிற்காக மிகவும் மகிழ்ச்சிஅடைந்தேன். ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட் எடுப்பது சாதாரணம் அல்ல. நான் கூட எடுத்தது கிடையாது. அதற்கென்று மற்றொரு வீரரை கீழே தள்ளி, இன்னொருவரை புகழ கூடாது.

குல்தீப்-ன் வெற்றியில் மகிழ்ச்சி கொண்டு, அணியுடன் கொண்டாடினால் மட்டும் தான் நானும் ஒருநாள் வெற்றி பெற முடியும். ஆனால் நான் தூக்கி எறியப்பட்டதாக நினைத்துவிட்டால், எப்படி மற்றவர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் இருப்பேன். நான் அப்போது எனது ரூமிற்கு சென்றுவிட்டேன், மனைவியிடம் கூறி ஆறுதல் அடைந்தேன். இருப்பினும் நான் மீண்டும் வீரர்களிடம் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். ஏனென்றால் அது எனது அணியின் வெற்றி என்று நினைத்து தான் என அஸ்வின் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை