பிரெஞ்ச் ஓபனை வென்ற நடாலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!

Updated: Mon, Jun 06 2022 10:51 IST
Former Cricketers Sachin, Sehwag, Shastri Praises Nadal's 14th French Open Win (Image Source: Google)

நேற்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின்  இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 8ஆம் நிலை வீரரான காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். காஸ்பர் ரூட்டை வீழ்த்த நடாலுக்கு 2 மணி நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதராக ஆண்ட்ரெஸ் கிமெனோ 1972 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். 34 ஆண்டுகள் 305 நாட்களில் பிரெஞ்ச் ஓபனை அவர் வென்று இருந்தார். இன்று 36 வயதான நடால் பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் ஆண்ட்ரெஸ் சாதனையை முறியடித்து ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதர் ஆனார்.

ஒரே சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை நடால் கைப்பற்றுவது இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான டேனியல் மெத்வெடேவை வீழ்த்தி நடால் தனது 2ஆவது ஆஸ்திரேலிய ஓபன் கிரீடத்தை வென்றார்.

இந்த பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம், நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இவருக்கு அடுத்த இடத்தில் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் சம நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், 14ஆவது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடாலுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரவி சாஸ்திரி ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 36 வயதில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி தனது 14ஆவது மற்றும் 22ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்தது நம்பமுடியாத சாதனை. வாழ்த்துக்கள் ரஃபேல் நடால்” என பதிவிட்டுள்ளார்.

ரவி சாஸ்திரி தனது பதிவில், “ ரஃபேல் நடால் ஒரு நவீன கால ஹெர்குலஸ், வெப்பமான களிமண் தொட்டியில் உருகுவதில்லை. அதை 15 ஆக மட்டுமே செய்ய விருப்பமாகத் தொடங்குகிறது. வாழ்த்துக்கள்” என பதிவுசெய்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை