கடைசி ஓவரில் காட்டடி அடித்த ஷனாகா; இலங்கை த்ரில் வெற்றி - காணொளி!

Updated: Sun, Jun 12 2022 11:49 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆறுதல் வெற்றிக்காக இலங்கை களமிறங்கியது.

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். வார்னர் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஆரோக் பிஞ்ச் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். கிளன் மேக்ஸ்வெல் 16 ரன்கள் எடுக்க, ஜோஸ் இங்லிஸ் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். ,தனால் ஆஸ்திரேலிய அணி 12.3வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர்.

2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஸ்மித் 27 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். மார்கஸ் ஸ்டோனிஸ் தன் பங்கிற்கு 28 ரன்கள் சேர்க்க, இறுதியில் மேத்தீவ் வெட் 13 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. சிஎஸ்கே வீரர் தீக்சனா 4 ஓவரில் 25 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீரர்கள் களமிறங்கினர்.

தொடக்க வீரர் குணதிலாகா 15 ரன்களிலும், நிசாங்கா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசலங்கா 26 ரன்கள், ராஜபக்சா 17 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதன் பின்னர் கேப்டன் ஷனக்கா தலையில் அனைத்து பொறுப்பும் விழுந்தது. ஷனாகா எதிர்கொண்ட முதல் 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே அடித்தார்.

கடைசி 3 ஓவரில் 59 ரன்கள் இலங்கையின் வெற்றிக்கு தேவைப்பட்டது.அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஷனாகா ரூத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர், பவுண்டரி என பறக்கவிட, அவருக்கு கருணரத்னேவும் நல்ல கம்பெனி கொடுத்தார். 18வது ஓவரில் 22 ரன்கள் விளாசிய ஷனாகா, கருணரத்னே ஜோடி, 19வது ஓவரில் 18 ரன்களை விளாசியது.

 

இதனால் கடைசி 6 பந்தில் 19 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் 2 பந்து, ஓயிடானது.அதன் பிறகு 2 பந்தில் 2 ரன்கள் சேர்க்க, கடைசி 4 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷனாகா 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாச, கடைசி பந்து ஓயிடானது. இதன் மூலம் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. ஷனாகா 25 பந்துகளில் 54 ரன்கள் விளாசி வெற்றியை தேடி தந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை