டிராவிட் பயிற்சியாளராகவுள்ளதை செய்தித்தாள்களில் படித்து தான் தெரிந்து கொண்டோன் - சவுரவ் கங்குலி!

Updated: Sat, Oct 23 2021 14:12 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளார். மேலும் அவரது தலைமையில் கீழ் இந்திய அணி சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது அவரிடம் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்குப் பின் ராகுல் திராவிட் நியமிக்கப்படப்போவதாகத் தகவல் எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கங்குலி,“ராகுல் டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார். அவர்தான் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் என்சிஏவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதாக நாங்கள் நம்புகிறோம். என்சிஏ அமைப்பு அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குகிறது.

இதுபற்றிப் பேசத்தான் ராகுல் டிராவிட் துபாய் வந்திருந்தார். என்சிஏ குறித்தும், எதிர்காலம் குறித்தும் நானும், திராவிட்டும் பேசினோம். நானும், டிராவிட்டும் ஏராளமாக விளையாடி இருக்கிறோம். ஆனால், ஒருமுறை கூடப் பயிற்சியாளராக டிராவிட் வருவதற்கு விருப்பம் இருப்பதாகக் கூறவில்லை. குறிப்பாக சீனியர் அணிக்குப் பயிற்சியாளராக டிராவிட் விரும்புவதாகத் தெரியவில்லை.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

என்சிஏவில் எந்த நிலையில் இருக்கிறாரோ அதைத் தொடரவே அவர் விரும்புகிறார். கால அவகாசம் கேட்டுள்ளார், பார்க்கலாம். ஆனால், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் போகிறார், ரவி சாஸ்திரிக்குப் பின் டிராவிட் தலைமை ஏற்கப்போகிறார் என்று நாளேடுகளைப் பார்த்த பின்புதான் எனக்கே தெரியும்” என்று கங்குலி தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை