Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Rahul dravid

முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
Image Source: Google

முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!

By Bharathi Kannan January 29, 2024 • 13:08 PM View: 76

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதன்மூலம் முதல் முறையாக முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றும் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 

இந்நிலையில் தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஹைத்ராபாத் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். ஆனால் முதல் இன்னிங்ஸில் எங்கள் வீரர்கள் அதனைத் தவறவிட்டார்கள். அந்த இன்னிங்ஸில் நாங்காள் 70 ரன்கள், 80 ரன்கள் என கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் குறைவாக ரன்கள் அடித்தாலும் அது வெற்றிக்கு வழிவகுத்திருக்கும்.

Related Cricket News on Rahul dravid

Advertisement