நியூசிலாந்து தொடரில் இருந்து ஆஷ்லே கார்ட்னர் விலகல்; மற்று வீராங்கனை அறிவிப்பு!

Updated: Sat, Mar 22 2025 14:28 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்க்கெனவே ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து மகளிர் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பின்னடவை சந்திந்தித்துள்ளது. 

அதன்படி ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது கேட்ச் பிடிக்கும் முயற்சியில் ஆஷ்லே கார்ட்னர் காயத்தை சந்தித்தார். இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயத்தின் தீவிரம் அதிகமாகியது தெரியவந்தது. 

இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் ஆஷ்லே கார்ட்னர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு பதிலாக அறிமுக வீராங்கனை சார்லி நாட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளில் குயின்ஸ்லாந்து அணிக்கும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய மகளிர் டி20 அணி: தஹ்லியா மெக்ராத் (கேப்டன்), டார்சி பிரவுன், நிக்கோல் ஃபால்டம், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம், சார்லி நாட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை