IND vs PAK: பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் இல்லாதது குறித்து கவுதம் காம்பீர் காட்டம்!

Updated: Sun, Aug 28 2022 21:00 IST
Image Source: Google

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தனது முடிவு குறித்து பேசிய ரோஹித் சர்மா ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ஐபிஎல் போட்டிகளில் நிறைய விளையாடிய அனுபவம் இருப்பதால் இலக்கை துரத்துவது நல்ல முடிவை தரும் என்றும் அவர் கூறியுள்ளார் . இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் பிளேயிங் லெவனில் இடம் கொடுத்துள்ள ரோகித் சர்மா, ரிஷப் பந்த் இன்றைய விளையாடவில்லை என்று அறிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் இந்த முடிவு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர், “ஆசிய கோப்பை என்பது மிகப்பெரிய தொடர். இதில் சோதனை செய்ய இடம் இல்லை. டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. இன்னும் இந்தியா ஐந்து போட்டிகளில் தான் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடுகிறது. 

இன்னும் நீங்கள் பிளேயிங் லெவலை தீர்மானிக்கவில்லை என்றால் எப்போது செய்யப் போகிறீர்கள். எனது அணியில் எப்போதுமே ரிஷப் பந்த் தான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை. இது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்” என  கடுமையாக சாடியுள்ளார். 

இதேபோன்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது. ரிஷப் பந்த் ஒரு நட்சத்திர வீரர், இந்தியாவின் எதிர்காலம் அவர்தான். அவருக்கு அணியில் இடம் தராதது நிச்சயம் சரியான முடிவாக இல்லை.

இது போன்ற வீரர்கள் தான் உங்களுக்கு உலக கோப்பையை வென்று தருவார். அவருக்கு வாய்ப்பு தராதது தவறு என்று கூறியுள்ளார். முதலில் கடந்த சில டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.ரிஷப் நடுவரிசையில்ல் களம் இறங்கி பெரிதாக சாதிக்கவில்லை. இதனால் ரோகித் சர்மா கடுமையான முடிவை இன்று எடுத்திருக்கிறார். இது பலன் தருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை