கவுண்டி கிரிக்கெட்: 400 ரன்களைக் கடந்து சாம் நார்த்தீஸ்ட் சாதனை!
இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி டிவிஷன் 2இல் கிளாமோர்கன் அணியும் லெய்செஷ்டர்ஷைர் அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் லெய்செஷ்டர்ஷைர் அணி 584 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் முல்டர் அதிகபட்சமாக 156 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து விளையாடிய கிளாமோர்கன் அணி முதல் இன்னிங்ஸில் 795 ரன்களைக் குவித்து, இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. மேலும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் கிளாமோர்கன் அணி அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனைப் படைத்துள்ளது.
இதற்கு முன் 2000இல் 718 ரன்களை எடுத்திருந்தது. தற்போது 795 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கிடையில் கிளாமோர்கன் அணியின் சாம் நார்த்தீஸ்ட் மிகப்பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்போட்டியில் சாம் நார்த்தீர்ஸ்ட் 450 பந்துகளில் 45 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 410 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பிரையன் லாரா 400 ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் தனித்துவமான சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பிறகு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 400 ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையை சாம் நார்த்தீஸ்ட் படைத்துள்ளார்.