பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது ஓமன்!
ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் 2019 - 2022 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஓமன் - அமெரிக்க (யுஎஸ்ஏ) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். ஆனால் 9ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கரிமா கோர் - ஹட்சின்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதனால் 44.4 ஓவர்களில் அமெரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹட்சின்சன் 49 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணிக்கு கேப்டன் மக்சூத் - முகமது நதீம் ஆகீயோர் அபாரமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் 49.4 ஓவர்களில் ஓமன் அணி இலக்கை எட்டி, இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் அமெரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.