ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Apr 09 2023 10:49 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. 

அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணியின் கடந்த போட்டியில் வென்றுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. முதலாவது ஆட்டத்தில் ஷுப்மன் கில்லும், அடுத்த ஆட்டத்தில் சாய் சுதர்சனும் அரைசதத்தை தாண்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

மேலும் பேட்டிங்கில் விருத்திமான் சஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று பெரிய பட்டாளமே உள்ளது. பந்து வீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். சொந்த மண்ணில் மீண்டும் விளையாடும் குஜராத் அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் அதிரடியாக செயல்பட்டு 81 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் ரமனுல்லா குர்பாஸ் (57 ரன்கள்), ரிங்கு சிங் (46 ரன்கள்), ஷர்துல் தாககூர் (68 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான பேட்டிங்கால் 204 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி அடுத்து பெங்களூவை 17.4 ஓவர்களில் 123 ரன்னில் சுருட்டியது.

சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (4 விக்கெட்), சுனில் நரின் (2 ரன்), அறிமுக வீரராக களம் கண்ட 19 வயது சுயாஷ் ஷர்மா (3 விக்கெட்) ஆகியோர் கலக்கினர். வேகப்பந்து வீச்சில் டிம் சவுதி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். முந்தைய வெற்றி உத்வேகத்துடன் கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது. இருப்பினும் வலுவான குஜராத் அணியை அசைப்பது என்பது கொல்கத்தாவுக்கு எளிதான விஷயமாக இருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 01
  • குஜராத் டைட்டன்ஸ் - 01
  • கேகேஆர் - 00

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மன்தீப் சிங்/ நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கே), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - ஷுப்மான் கில், ரிங்கு சிங், சாய் சுதர்சன்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸல், ஹர்திக் பாண்டியா, சுனில் நரைன்
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப்.

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - ஷுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை