ஐபிஎல் 2023: எங்களது அணிக்கு தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தேவை - ஆஷிஷ் நெஹ்ரா!

Updated: Sat, Dec 10 2022 11:23 IST
Gujarat Titans Conduct Player Trials At The Narendra Modi Stadium In Ahmedabad (Image Source: Google)

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க அனைத்து அணிகளும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏலத்திற்கு முன்பாக பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் குஜராத் அணி வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபெர்குசன், அதிரடி ஆட்டக்காரர் குர்ப்ராஸ் ஆகியோரரை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது.

இதையடுத்து அந்த அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது,

“நீங்கள் கோப்பையை வென்றாலும் அணியில் சில மாற்றங்களை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டும். எங்களது அணிக்கு தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தேவை . சிறிய ஏலத்தில் அணிக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ள அனைத்து அணிகளும் முயல்வர். அதையே தான் நாங்களும் செய்யப் போகிறோம்.

எங்கள் அணியில் நிறைய வீரர்களை நாங்கள் வெளியிடாததால் எங்களுக்கு நிறைய வீரர்களை தேர்வு செய்ய தேவை இல்லை. உள்நாட்டு வீரர்களின் இடம் 2 முதல் 3 உள்ளது. நீங்கள் விரும்பும் வீரரை உங்கள் அணிக்கு பெறுவீர்கள் என்று இல்லை. ஏனெனில் மேலும் 9 அணிகள் ஏலத்தில் உள்ளனர். அது மிகவும் முக்கியமானது என்றார்.

மேலும், ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒரு அணியாக வெற்றி பெற விரும்புகிறீர்கள். இங்கு யாரும் பங்கேற்பதற்காக வரவில்லை, வெற்றி பெற வேண்டும். ஒரு வெற்றியாளர் கண்டிப்பாக இருப்பார். ஆனால், வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் மிகக்குறைவு.

குப்ராஸ் ஒரு நல்ல வீரர், ஆனால் அவர் மற்றொரு அணிக்கு சென்றுள்ளார். சர்வதேச அணியில் டி20 கேப்டன்களாக இருக்கும் பலர் ஐபிஎல்லில் தேர்வாகவில்லை. நாங்கள் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளோம், ஆனால் 1 லட்சம் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர், அது உங்களுக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை