ஐபிஎல் திருவிழா 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Mar 28 2022 11:53 IST
Image Source: Google

ஐபிஎல் திருவிழாவில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில், இந்த சீசனில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதிலும் இப்போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் - ஹர்திக் பாண்டியா ஆகியோர் நேருக்கு நேர் மோதவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - வான்கேடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஐபிஎல் 2022 இல் டைட்டன்ஸ் எப்படி விளையாடுகிறது என்பது அவர்களின் பந்துவீச்சாளர்களை பொறுத்தே இருக்க போகிறது. ஆம், ஷமி, லாக்கி பெர்குசன், அல்சாரி ஜோசப், என உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் யாஷ் தயாள் மற்றும் பிரதீப் சங்வான், வருண் ஆரோன் இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பிடிக்க காத்திருக்கின்றனர். 

இவர்களுடன் தற்போது உடல்தகுதி பெற்றிருக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா, விஜய் ஷங்கரும் வேகப்பந்து வீச்சை மேலும் பலமாக்கலாம். அதேநேரம், ரஷித் கான், சாய் கிஷோர் உடன் ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாட்டியா போன்ற பார்ட் டைம் ஸ்பின்னர்களும் பவுலிங் யூனிட்டிற்கு பக்கபலம் சேர்க்கின்றனர். பவுலிங்கை தலைமையேற்று வழிநடத்த இருக்கும் ஷமியும், ரஷீத்தும் குஜராத் அணியின் துருப்பு சீட்டாக இருக்க போகிறார். 

பவுலிங் யூனிட்டிற்கு நேரெதிராக பேட்டிங் யூனிட் உள்ளது எனலாம். தொடர் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பே ஓப்பனிங் பொஷிஷனில் இறங்க வேண்டிய ஜேசன் ராய் தொடரில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவருக்குப் பதிலாக ஆப்கன் வீரர் ரஹ்மமுல்லா குர்பாஸை சேர்த்துள்ளது குஜராத் நிர்வாகம். ஒட்டுமொத்தமாக, குஜராத்தின் பேட்டிங் யூனிட்டில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டரில் பெரிய இன்னிங்ஸ் விளையாடக் கூடிய ஒரு வீரரின் தேவை அதிகம் உள்ளது. அதற்கான சரியான வீரராக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்களாக யாரும் இல்லை. சுப்மன் கில் மட்டுமே பார்மில் இருக்கும் ஒரு வீரர் என்பது கவனிக்கத்தக்கது.

லக்னோ அணியின் சிறப்பம்சமே அதன் ஆல் ரவுண்டர்கள்தான். இப்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டின் திறன்மிகுந்த ஆல் ரவுண்டர்களாக, மேட்ச் வின்னர்களாக அறியப்படுகிற ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவருடன், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், கைல் மேயர்ஸ் என தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர்கள் நிறைந்த அணியாக உள்ளது. இதுவே இந்த அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. 

பந்துவீச்சும் இந்த அணியின் பலமாக உள்ளது. சூழல் அல்லது வேகப்பந்துவீச்சு என எதுவாக இருந்தாலும் இரண்டிலும் திறமையான வீரர்களை கொண்டுள்ளது. ரவி பிஷ்னோய், ஷாபாஸ் நதீம், க்ருனால் பாண்டியா, என சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசைக்காட்டினால், ஆண்ட்ரு டை, அங்கித் சிங் ராஜ்பூத், துஷ்மந்த சமீரா, மொஹ்சின் கான், மயங்க் யாதவ் என இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை கொடுக்கின்றனர். இவர்களை ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் சீனியர்கள் வீரர்களாக வழிநடத்த உள்ளனர்.

கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் யூனிட்டை வழிநடத்த உள்ளார். அவருடன், குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, எவின் லூயிஸ் போன்றோர் பலம் சேர்க்கின்றனர். என்றாலும், இந்த பேட்டிங் யூனிட்டே பலவீனமாக உள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஓப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் டி காக் இன்னும் அணியுடன் இணையவில்லை. வங்கதேச தொடரில் விளையாடி வருவதால் அவர் வருகை தாமதமாகிறது. மறுபுறம், மனிஷ் பாண்டே, எவின் லூயிஸ் ஆகியோரை பொறுத்தவரை இருவருமே கடந்த சீசன்களில் நிலைத்தன்மை இல்லாத ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

உத்தேச அணி

குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷுப்மான் கில், விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா(கே), ராகுல் திவேத்தியா, ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி ஃபெர்குசன், சாய் கிஷோர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கே.எல்.ராகுல் (கே), குயின்டன் டி காக், எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, மனன் வோஹ்ரா, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்/மொஹ்சின் கான்.

ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - மணீஷ் பாண்டே, எவின் லூயிஸ், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ரஷித் கான், முகமது ஷமி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை