இந்தியவில் கோலாகலமாக நடைபெற்று வந்த 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் இணைப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. இதில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 12 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அகமதாபாத்.
  • நேரம் - இரவு 8 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸை வழிநடத்தி வரும் ஹர்டிக் பாண்டியா அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். லீக் சுற்றில் நடந்த 14 ஆட்டங்களில் அந்த அணி 4இல் மட்டும் தோல்வி கண்டு 10 வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப்க்கு முன்னேறியது. சில ஆட்டங்களில் அதிஷ்டத்தால் வெற்றி பெற்றது என்றாலும், அதற்குப்பின் இருந்த அந்த அணியினரின் உழைப்பு அளப்பரியது.

இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு பல அணிகள் தங்கள் அணியை மறுகட்டமைப்பு செய்திருந்தன. ஆனால், அறிமுக அணியான குஜராத் முதலில் முக்கிய வீரர்கள் தேர்வு, பின்னர் மெகா ஏலத்தில் வீரர்கள் தேர்வு, அதன்பின்னர் கேப்டன் தேர்வு என ஒவ்வொரு படியாக கடந்து, தீவிர பயிற்சி மேற்கொண்டு நெடுந்தூர பயணத்திற்குப் பிறகு தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. ரஷித் கான், அல்சாரி ஜோசப் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணிக்கு மேலும் வலு சேர்க்கிறார்கள். சுழலில் ரஷித் கான் வழக்கம்போல் மிரட்டி வருகிறார். அவருடன் சாய் கிஷோர் உறுதுணையாக இருக்கிறார். லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் போன்ற வீரர்கள் வேகத்தில் பட்டையை கிளப்புகின்றனர்.

Advertisement

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 வெற்றி 5 தோல்விகளுடன் லீக் சுற்றில் 2ம் இடத்தை பிடித்ததோடு நிறைவு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 4 சதம் 4 அரைசதம் என 824 ரன்களை குவித்து வலுவான ஃபார்மில் உள்ளார். மேலும், அவர் நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் வசப்படுத்தி உள்ளார்.

பட்லர் தவிர, ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் ஹாட்ரிக் அரைசதம் அடித்த ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வினும் அணியில் இருப்பதால் பேட்டிங் வரிசை கூடுதல் பலம் பெற்றுள்ளது.

பந்துவீச்சில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுழல் மன்னன் யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பை வசப்படுத்தியுள்ளார். அவருடன் இணைந்து நெருக்கடி கொடுக்கும் அஸ்வினும் தனது மாயாஜால சுழலில் சிக்க வைத்து கதிகலங்க செய்கிறார். டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் வேகத் தாக்குதல் தொடுத்து மிரட்டி வருகின்றனர்.

Advertisement

இரு அணிகளுமே சமபலத்துடன் காணப்படுவதால், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உத்தேச அணி

குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், ஆர் சாய் கிஷோர், முகமது ஷமி, யாஷ் தயாள்

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மையர், ரியான் பராக், ஆர் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், விருத்திமான் சாஹா
  •      பேட்டர்ஸ் - ஷிம்ரோன் ஹெட்மியர், ஷுப்மன் கில், டேவிட் மில்லர்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா
  •      பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, யாஷ் தயாள், ரஷித் கான்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News