ஐபிஎல் 2022 குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, May 23 2022 14:22 IST
Image Source: Google

15ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றன. மும்பையில் 3 மைதானங்களிலும், புனேவில் ஒரு மைதானத்திலும் லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிவடைந்தன.

குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. மும்பை இந்தியன்ஸ், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில் நாளை முதல் நளை பெறும் முதல் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக முன்னேறும்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

குஜராத் அணி ‘லீக் முடிவில் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா (413 ரன்), சுப்மன் கில் (403 ரன்), மில்லர் (381 ரன்), விருத்திமான் சஹா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், முகமது ஷமி (தலா 18 விக்கெட்), போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ரஷித்கான் ‘ஆல்ரவுண்டு’ பணியில் நல்ல நிலையில்இருக்கிறார்.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 சதம், 3 அரை சதத்துடன் 629 ரன்கள் குவித்து இந்த சீசனில் முதல் இடத்தில் உள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் (374 ரன்), படிக்கல்(337 ரன்), ஹெட்மயர் (297 ரன்), ரியான் பராக் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் 26 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா (15 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். அஸ்வின் ஆல்ரவுண்டு பணியில் ஜொலித்து வருகிறார்.

இந்த சீசனில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை மோதின. இதில் ராஜஸ்தானை 37 ரன்னில் குஜராத் வீழ்த்தி இருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருவதால் இப்போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொடர் மழை நீடித்தால் போட்டி ரத்துசெய்யப்பட்டு புள்ளிப்பட்டியளில் அதிக புள்ளிகளில் உள்ள அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

உத்தேச லெவன் 

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேத் மெக்காய்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள்: ஷிம்ரோன் ஹெட்மையர், ஷுப்மன் கில், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர்கள்: ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள்: யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், ரஷித் கான், முகமது ஷமி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை