பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடக்கூடாது - ஹர்பஜன் சிங்!

Updated: Sun, Oct 24 2021 21:50 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தினால் 152 ரன்களை பாகிஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணி எப்போதும் கணிக்க முடியாத ஒரு அணியாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும். ஏனெனில் கடந்த கால சாதனைகள் மீது நாம் கவனம் செலுத்தக் கூடாது என்பதை நினைக்கிறேன். தற்போது உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மேலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தற்போது அதிகப்படியான போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடவில்லை. இதன் காரணமாக அதை வைத்து எதையும் கூற முடியாது. போட்டி நாளன்று என்ன நடக்கிறதோ ? அது தான் இறுதி. நம்முடைய அணி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியை நம்மால் எளிதில் வீழ்த்த முடியும்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஒரு அணி மற்ற அணியை வீழ்த்துவது என்பது களத்தில் நடைபெறும் செயல்பாடுகளைப் பொருத்தது தான். அதே போன்று பாகிஸ்தான் அணியும் இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை