இந்த தோல்வி குறித்து யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை - ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, Aug 14 2023 15:01 IST
இந்த தோல்வி குறித்து யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)

இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டி தொடரில் விளையாடி வந்தது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று அமெரிக்காவின் ஃப்ளோரிடவில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சம நிலையில் இருந்த நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 166 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்ததோடு டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தப் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் தொடர் நாயகனாகவும், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து போட்டிக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா ” சில நேரங்களில் தோல்வியும் நல்லது தான். இதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு நாமே சவால்களை ஏற்படுத்தி முன்னேற முடியும் என்று நம்புகிறேன். டேட்டிங் என்பது துவக்கம் நன்றாகவே இருந்தாலும் நான் ஆட வந்த போது அதிக அளவு நேரத்தையும் பந்துகளையும் எடுத்துக் கொண்டேன். இது நமது அணி விரைவாக ரன் குவிப்பதை பாதித்தது. அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு தோல்வியின் மூலம் நமக்கு நாமே சவால்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் இதன் காரணமாக வரும் காலங்களில் சிறப்பான ஆட்டத்தை கொண்டுவர முடியும் என நம்புகிறேன். இந்த தோல்வி குறித்து யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொடரில் இருந்து ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. இந்திய அணிக்காக களம் இறங்கிய ஒவ்வொரு வீரர்களும் தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ந்து எங்களுக்கு புதிய சவால்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது. புதிய திட்டங்களுடன் எங்களுக்கு மிகச் சிறந்த போட்டியை அவர்கள் வழங்கினார்கள். மேலும் இந்த தொடரில் இந்தியாவிற்காக களம் இறங்கிய இளம்பிரர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஒவ்வொரு போட்டியிலும் அணி கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது இளம் வீரர்கள் கைகொடுத்து அணியை தூக்கிய விதம் மிகவும் பாராட்டிற்குரியது . இந்த தொடரின் மூலம் கற்றுக் கொண்ட நிறைய பாடங்களை கற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி . நம் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு நிறைய கால அவகாசம் இருக்கிறது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை