டி20 உலகக்கோப்பை: மருத்துவமனையில் இந்திய வீரர் அணுமதி!
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரான ஹார்டிக் பாண்டியா பேட்டி முடியும் முன்னரே மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது 8 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வீசிய பவுன்சர் பந்தில் தோல் பகுதியில் காயமடைந்த அவர் ஆட்டமிழந்து வெளியேறும் போது தனது தோள் பட்டையை பிடித்தவாறு வெளியேறினார். பின்னர் 2-வது இன்னிங்சில் போது அவர் பீல்டிங் செய்ய வரவில்லை அவருக்கு பதிலாக இஷான் கிஷன் நேற்றைய போட்டியில் பீல்டிங் செய்தார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
மேலும் காயமடைந்த பாண்டியா மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய சென்றுள்ளார் என்ற தகவலும் அதன் பின்னர் வெளியானது. ஏற்கனவே பந்து வீசாமல் இருந்து வரும் பாண்டியா தற்போது பேட்டிங்கிலும் நேற்று பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக நிச்சயம் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் விளையாடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.