ஹர்திக் ஆல் ரவுண்டர் கிடையாது - கபில் தேவ் கருத்து!
இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்பு முன்புபோல அவரால் பந்துவீச முடியவில்லை. தொடர்ந்து அவர் முழுநேர பேட்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்து வீசாமல் இருந்து வந்த அவர் டி20 உலக கோப்பை தொடரின் போது பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அந்த தொடரிலும் அவர் 4 ஓவர்கள் மட்டுமே வீசியதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இணைக்கப்பட்டார். மேலும் இனி வரும் தொடர்களில் அவரே இந்திய அணியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னைப் பொறுத்தவரை ஹார்டிக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டர் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசிய கபில் தேவ், “என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் தற்போதைய 2 ஆல்ரவுண்டர்கள் யாரெனில் ஜடேஜா மற்றும் அஷ்வின் தான். ஏனெனில் அவர்கள் இருவருமே பவுலிங் செய்வது மட்டுமின்றி அணிக்கு தேவையான வகையில் சிறப்பாக பேட்டிங் செய்கின்றனர்.
பாண்டியாவை தற்போது ஆல்-ரவுண்டராக நான் கருதவில்லை ஏனெனில் அவர் தற்போது பந்து வீசுவதே கிடையாது. வெறும் பேட்ஸ்மேனாகவே மட்டுமே விளையாடி வருகிறார். அவர் எப்போது உடற்தகுதி பெற்று பௌலிங் செய்கிறாரோ ? அப்போதுதான் நாம் அவரை ஒரு ஆல்ரவுண்டராக பார்க்க முடியும். அதுவரை பாண்டியாவை ஆல் ரவுண்டர் பட்டியலில் சேர்க்க மாட்டேன்” என கபில்தேவ் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.