பேட்டிங் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் அசத்திய ஹர்லீன் தியோல் - காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபற்றது.
அதன்படி, இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மெக் லனிங் அதிரடியாக விளையாடி 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 92 ரன்களையும், ஷஃபாலி வர்மா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் தர்பபில் மேக்னா சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் பெத் மூனி 44 ரன்களிலும், தயாளன் ஹேமலதா ஒரு ரன்னிலும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 22 ரன்னிலும், டியான்டிரா டோட்டின் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்லீன் தியோல் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களையும், காஷ்வீ கௌதம் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் ஆட்டநாயகி விருதை வென்றார்.
இப்போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் பேட்டிங்கில் கலக்குவதற்கு முன்னதாக ஃபீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அதன்படி இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை தனுஜா கன்வர் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங் மிட் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்து பந்தை தூக்கி அடித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது 30யார்ட் வட்டத்திற்குள் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்லீன் தியோல் சூப்பர் வுமன் போல் குதித்து தனது வலது கையால் பந்தை பிடிக்க முயன்றார், ஆனால் பந்து அவரின் கையில் பட்டு கீழே விழ சென்ற சமயத்தில் மீண்டும் இடது கையால் பிடிக்க முயன்று அதிலும் தோல்வி யடைந்தார். இருப்பினு அவரது இந்த அற்புதமான ஃபீல்டிங் முயற்சியின் காணொளியானத்ய் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை அவர் அந்த கேட்ச்சை பிடித்திருந்தால், அது இத்தொடரின் சிறந்த கேட்சாக இருந்திருக்கும்.