இரு பெருந்தலைகளை அணிக்குள் இழுத்த பாகிஸ்தான்!
ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில அதிரடி முடிவுகளை மேற்கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 36ஆவது தலைவராக ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹெய்டனும், பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரமீஸ் ராஜா, செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி நாயகனாகத் திகழ்ந்த மேத்யூ ஹெய்டன், இதுவரை 103 டெஸ்ட், 161 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி 15ஆயிரத்திற்கும் அதிகமான சர்வதேச ரன்களை குவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்டர், 64 டெஸ்ட், 30 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் விளையாடி 270 சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.