புவிக்கு பதில் தாக்கூரை அணியின் எடுங்கள் - விவிஎஸ் லக்ஷ்மண்!

Updated: Sun, Oct 31 2021 14:58 IST
Image Source: Google

 
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே அவற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றன. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்த 2 அணிகளும், இன்றைய போட்டியில் மோதுகின்றன. அதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். 

எனவே இன்றைய போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி தான் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தை பிடித்து, 2ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவானதாக இல்லை. ஹர்திக் பாண்டியா பந்துவீசாததால் 6ஆவது பவுலிங் ஆப்சன் இல்லை. அதேபோல புவனேஷ்வர் குமாரின் பவுலிங் ஐபிஎல்லில் இருந்தே எடுபடாத நிலையில், ஷர்துல் தாகூரை எடுத்தால் பேட்டிங்கும் ஆடுவார் என்பதால் அது அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும் என்ற வலியுறுத்தல்கள் உள்ளன. 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக தயாராகும்போது பயிற்சியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசியிருக்கிறார். எனவே அவர் இன்று ஒருசில ஓவர்கள் வீசுவார் என்பதால், 6ஆவது பவுலிங் ஆப்சனாக திகழ்வார். புவனேஷ்வர் குமாரும் நீக்கப்பட வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை ஆடவைக்கலாம் என்று விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்ஷ்மண், “நான் ஷர்துல் தாகூரைத்தான் அணியில் எடுப்பேன். ஷர்துல் தாகூர் பவுலிங்கில் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுப்பது மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் ஸ்கோர் செய்வார். ஷர்துல் தாகூரை சேர்ப்பது, பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும்; பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும். 

Also Read: T20 World Cup 2021

எனவே நான் கண்டிப்பாக புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரைத்தான் ஆடவைப்பேன். புவனேஷ்வர் குமார் அனுபவம் வாய்ந்த பவுலர் தான். ஆனால் இப்போதைக்கு இந்திய அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்க்க வேண்டுமென்றால், ஷர்துல் தாகூரைத்தான் ஆடவைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை