IND vs NZ: அஸ்வின் மோசமாக பந்துவீசி பார்த்ததில்லை - மார்டின் கப்தில்

Updated: Thu, Nov 18 2021 17:10 IST
Image Source: Google

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்வானார். 

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். நன்கு விளையாடி வந்த மார்க் சாப்மேனை வீழ்த்திய அஸ்வின், அதே ஓவரில் கிளென் பிளிப்ஸை வீழ்த்தி அசத்தினார். 

இதனால் 14ஆவது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த நியூஸிலாந்து ஒரே ஓவரில் அஸ்வினிடம் இரு விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. இறுதியில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளுடன் குறைவான ரன்கள் கொடுத்தது அஸ்வின் மட்டுமே. 

இந்நிலையில் அஸ்வினைப் பாராட்டி பேட்டியளித்துள்ளார் பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில். இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் அற்புதமான பந்துவீச்சாளர். தன்னுடைய பந்துவீச்சில் கட்டுப்பாட்டுடன் இருப்பார். மோசமான பந்துகளை அவர் எப்போதாவதுதான் வீசுவார். 

Also Read: T20 World Cup 2021

அவருடைய கிரிக்கெட்டில் வாழ்க்கையில் நிறைய மோசமான பந்துகளை வீசி நான் பார்த்ததில்லை. அவர் பந்துவீச்சை சமாளிப்பது கடினம். பந்தின் வேகத்தைச் சரியாகப் பயன்படுத்துவார். அவர் பந்தில் அவ்வளவு சுலபமாக ரன்கள் எடுத்துவிட முடியாது” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை