மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து பந்தாடி ஆஸி இமாலய வெற்றி!
எட்டாவது மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த அலிசா ஹீலி - மெக் லெனிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அலிசா ஹீலி அரை சதமடித்தார். மேலும் மெக் லெனிங் 41 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 40 ரன்களையும் சேர்த்த்னார். நியூசிலாந்து தரப்பில் அமிலா கெர், டஹுஹு தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூலாந்து மகளிர் அணியில் அமிலார் கெர், ஜெஸ் கெர் ஆகியோரத் தவிர மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றையிலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 14 ஓவரில் 76 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. இதன்மூலம் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.